உலகம்

கரீபியன் தீவில் சுனாமி எச்சரிக்கை

(UTV|கியூபா) – மைக்கா மற்றும் கியூபா நாடுகளில் 7.7 ரிக்டர் அளவுகோலில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜமைக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையிலான பாக் ஜலசந்தியில் நேற்று (28) பிற்பகல் 2.10 மணிக்கு 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜமைக்காவின் லூசியாவி லிருந்து வடமேற்கே 72 மைல் தொலைவிலும், கியூபாவின் நிகிரோவிலிருந்து தென்மேற்கே 87 மைல் தூரத்திலும் 6.2 மைல் ஆழத்தில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மியாமி வரை உணரப்பட்டது.

குறித்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்து எச்சரிக்கை விடுத்த பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கம் காரணமாக கடலில் 3.5 அடி வரை அலைகள் உயரும் என்றும், இதன் காரணமாக பெலிஸ், கியூபா, ஹோண்டு ராஸ், மெக்ஸிகோ, ஜமைக்கா மற்றும் கேமன் தீவுகளின் கடற்கரைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தது.

நிலநடுக்கத்திலிருந்து ஏற்பட்ட சேதத்தின் அளவு தெளிவாக இல்லை, ஆனால் இறப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சீனா மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது- ஜீ ஜின்பிங்

எகிறும் கொரோனா : மீண்டும் முடக்கம்

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கேட்டு பின்வாங்கப் போவதில்லை