சூடான செய்திகள் 1

கராபிட்டியவில் புற்றுநோய் நிவாரண மையம்

(UTVNEWS | COLOMBO) – கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் நிவாரண மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது.

புற்றுநோய் சங்கம் மற்றும் பரோபகாரர்கள் நிதிபங்களிப்புடன் குறித்த நிவாரண மையம் கடற்படையினரால் நிர்மாணிக்கப்படுகின்றது.

அதன்படி, சுப நேரத்தில் மத சடங்குகளுடன் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிகழ்வுக்காக காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதானபதிரன, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல், வைத்தியசாலைகளின் இயக்குனர் டொக்டர் ஜி. விஜேசூரிய, அரசு அதிகாரிகள், புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்: தூதரம் அறிவிப்பு

2016ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி

ஈராக் மக்கள் போராட்டம்; 93 பேர் உயிரிழப்பு, 4000 பேர் காயம்!