உள்நாடு

கரன்னாகொட, தசநாயக்க மீதான வழக்கு விசாரணையை இடைநிறுத்துமாறு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – தமது விசாரணைகள் நிறைவுபெறும் வரை கடற்படையின் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி கே பி தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

11 இளைஞர்களைக் கடத்திச்சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட மற்றும் D.K.P. தசநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த வழக்கில் அரசியல் அழுத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றத்தில் சட்டரீதியிலான நடவடிக்கையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆணைக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

3 மணி நேர ‘நெஞ்சறை’ சத்திர சிகிச்சையில் உயிர் பிழைத்த இளைஞர் – மன்னார் வைத்தியசாலையில் சம்பவம்!

மண்ணினுள் மறைத்து பாலை மரக் குற்றிகளை கொண்டு சென்றவர் கைது!

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்கள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லை [VIDEO]