வகைப்படுத்தப்படாத

கரதியான ஆர்ப்பாட்டகாரர்கள் விடுவிப்பு

(UDHAYAM, COLOMBO) – கரதியான குப்பை கொட்டும் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கெஸ்பேவே நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனஆராச்சி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், அவர்களை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இந்த மாதம் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

Sri Lanka likely to receive light showers today

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது

சட்டம் தன் கடமையை செய்யும்