உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாத திகதி அடுத்தவாரம்

(UTV | கொழும்பு) – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

ஜுலை மாதம் முதலாம் திகதி இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, கடந்த 22 ஆம் திகதி, நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த அவநம்பிக்கை பிரேரணையில் 43 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் அடையாளம் [UPDATE]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor

தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை திணைக்களத்திற்கு புதிய தலைவர் நியமனம்!