உள்நாடு

கம்பஹா மாவட்ட சில பகுதிகளில் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(09) பிற்பகல் 4 மணி முதல் 14 மணி நேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஏக்கல, கொட்டுகொட, கட்டுநாயக்க, சீதுவை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையம், மினுவாங்கொடையின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

ஜா-எல மார்க்கத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுகின்றது.

இன்று பிற்பகல் 4 மணி முதல் நாளை அதிகாலை 6 மணிவரையான 14 மணிநேரம், குறித்த பகுதிகளில் நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி

editor

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்