உலகம்

கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

(UTV |  வாஷிங்டன்) – புளோரிடாவை சேர்ந்த நர்சு நிவியன் பெட்டிட் இவர் 2001-ம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் பெண்மணி. முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் ஆகிய சிறப்புகளை பெற்றார்.

இந்நிலையில் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த நர்சை பொலிசார் கைது செய்துள்ளனர்.

புளோரிடாவை சேர்ந்த நர்சு நிவியன் பெட்டிட் (வயது 39). இவர் 2001-ம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் சிறையில் உள்ள தனது கணவருக்கு ஜிபே மூலம் வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறையில் உள்ள கைதிகளை அவரது குடும்பத்தினருடன் இணைத்து ஜிபே என்ற கணினி பயன்பாடு மூலம் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.

நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கலைஞருக்கு அனுப்பிய வீடியோவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பொலிசார் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில்;

பெப்ரவரி 13ம் திகதி முதல் பெப்ரவரி 18ம் திகதி வரை நிபியன் பெட்டிட் அனுப்பிய வீடியோவில், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மீது கொலை மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார்.

ஜனாதிபதி ஜோபைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் மீதான வெறுப்பை பற்றி பேசுகிறார். மேலும் கமலா ஹாரிசை கொல்வது பற்றியும் பேசி உள்ளார்.

ஒரு வீடியோவில் கமலா ஹாரிஸ் நீங்கள் இறக்க போகிறீர்கள். உங்கள் நாட்கள் ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டன.

பெப்ரவரி 18ம் திகதி அனுப்பப்படும் என்றும் மற்றொரு வீடியோவில், நான் துப்பாக்கி வாங்க செல்கிறேன். நான் கடவுளிடம் சத்தியம் செய்கிறேன். இன்றிலிருந்து 50 நாட்களில் நீங்கள் (கமலா ஹாரிஸ்) இறக்கப் போகிறீர்கள். இந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க இரகசிய சேனல் விசாரணை நடத்தி வந்தது. நர்சு நிவியன் பெட்டிடின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

 

Related posts

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ‘ஜோ பைடன்’

கொரோனா வைரஸ் – சுமார் 80,000 பேர் பாதிப்பு

ஆசியாவிற்கு வெளியில் பதிவானது முதல் மரணம்