உள்நாடு

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

(UTV | கொழும்பு) – நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவினை துறைமுகத்திற்குள் கொண்டுவருவதற்கு முன்னர் கப்பலில் வைத்தே அதன் தரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை இன்றைய தினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் சமையல் எரிவாயு மற்றும் அதன் கொள்கலன்கள் குறித்து அதனுடன் தொடர்புடைய நிறுவனத்தினால் இன்று முதல் ஆராயப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Related posts

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்

வாகன விபத்தில் உப பொலிஸ் அதிகாரி பலி

160வது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்