உள்நாடு

கப்பலின் பிரதான கெப்டன் காலி துறைமுகத்திற்கு

(UTV | காலி )- தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலின் பிரதான கெப்டன் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடற்படையினரின் விசேட பாதுகாப்புடன் நேற்று இரவு கல்முனை குருந்தையடி கடற்பிரதேசத்தில் இயந்திரப் படகு ஒன்றில் அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 3 ஆம் திகதி பனாமா அரசுக்கு சொந்தமான MT NEW DIAMOND என்ற கப்பல் தீ விபத்துக்குள்ளாகியது.

இதன் போது தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மாலுமி ஒருவர் உள்ளிட்ட 18 ஊழியர்களை இலங்கைக் கடற்படை மீட்டிருந்தது.

அத்துடன் குறித்த கப்பலின் பிரதான கப்டன் மீட்கப்பட்டு வேறு கப்பல் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் 6 நாட்களின் பின்னர் அவர் இன்று கரைக்கு அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இரத்த தான முகாம்

editor

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 793 பேர் கைது