சூடான செய்திகள் 1

கபீர் ஹாசிம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் கூட்டணி ஒன்று அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் ஊடகங்கள் மூலமே தாம் தெரிந்து கொண்டதாக கட்சியின் தவிசாளரான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதியன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கபீர் ஹாசிமுடன் தனிப்பட்ட ரீதியில் பேசப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை,ஐக்கிய தேசியக் கட்சியை காப்பாற்ற வேண்டுமானால் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக்கப்பட வேண்டும் என்று கபீர் ஹாசிம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு

ரத்மக சம்பவம் – வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டு சடலம் எரிக்கப்பட்டுள்ளது

இன்றும் நாளையும் கைதிகளை சந்திக்கும் வாய்ப்பு