உள்நாடுசூடான செய்திகள் 1

கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – பிரதான சந்தேக நபர் புத்தளம், பாலாவியில் கைது

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.

Related posts

வைத்தியாசாலையை புதிய இடத்தில் நிர்மாணிப்பதற்கான Master Plan யை தயாரிப்பதற்கு சுகாதார அமைச்சின் செயலாளரினால் நிதி ஒதுக்கீடு….!

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று