வகைப்படுத்தப்படாத

கனரக வாகனம் பாதையில் தாழிறங்கியது .. தலவாக்கலை டயகம வீதி போக்குவத்து தடை மாற்றுவழியை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் வேண்டுகோள் – [photos]

(UDHAYAM, COLOMBO) – தலவாக்கலை டயகம பிரதான பாதையின் நாகசேன பகுதியில் கனரக வாகனமொன்று பாதையில் தாழிறங்கியுள்ளதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்

லிந்துலை பொலிஸார் பிரிவிற்குட்பட்ட நாகசேனை 3 ம் கட்டை பகுதியில் 10.06.2017. காலை 8 மணியளவில் 28 ஆயிரம் மெட்ரிக்டொன் எடையுடைய   கனரக வாகனம்  தாழிறங்கியுள்ளது

டயகம பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பு பண்ணைக்கு புல் ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு தாழிறங்கியுள்ளதாகவும்  போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதிகள் தேயிலை ஆராய்ச்சி நிலைய பாதை அல்லது நானுஓயா மெரேயா பாதையை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர் குறித்த வானத்திலுள்ள புல் இறகக்கப்படுவதாகவும் வாகனத்தை அப்புரப்டுத்தும் மீண்டும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/vvv.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/v.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/vv.jpg”]

 

Related posts

யேமனின் தலைநகர் சானாவில் அவசரகால நிலை

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

கம்பஹா-வத்தளை-மாபோல நகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்