உள்நாடுகாலநிலை

கனமழை, பலத்த காற்று – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (14) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கடல் பகுதிகளில் 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதுடன் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

இது குறித்து மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் பதவியேற்பு!

editor

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை