வகைப்படுத்தப்படாத

கனமழை காரணமாக 3 மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|INDIA)-வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

அமெரிக்க ஜனாதிபதி பிரித்தானியா விஜயம்

எதிர்வரும் சில நாட்களில் மின்சாரம் தடை ஏற்படும் அபாயம்

Postal workers to launch sick-leave protest