சோமாவதிய விகாரைக்குச் செல்லும் பாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புலஸ்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காவில – சோமாவதிய வீதியில் சோமாவதிய விகாரைக்கு அருகிலுள்ள திக்கல பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் வரையிலான பாதை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நேற்று (13) முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோமாவதி விகாரைக்கு வழிபாடுகளுக்காக வந்தவர்களை, அவர்கள் பயணித்த பஸ்களின் ஊடாக வெலிகந்தை ஊடாக வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.