அரசியல்உலகம்

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராக பதவியேற்பு

கனடா (Canada) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் இளைய புதல்வரே ஹரி ஆனந்தசங்கரி ஆவார்.

இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13 ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.

கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

கனடாவில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களிடம் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்காக முன்னின்று செயற்படுபவராக ஹரி ஆனந்தசங்கரி அந்த காலங்களில் திகழ்ந்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் அத்தோடு, கனடா தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் அவர் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, அத்துடன், கனேடிய தமிழ்க் காங்கிரஸ் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் அவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் – மன்னாரில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் தேர்தல் பிரசாரம்

editor

சவூதி அரேபியாவும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு பணிப்பு