கேளிக்கை

கனடா தொழிலதிபருடன் விரைவில் திருமணம்?

(UTV | கொழும்பு) –  நடிகை லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அவர் தற்போது ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் நடிகர் ஆரி அர்ஜுனாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.

இதனிடையே, நடிகை லாஸ்லியாவிற்கும் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், அந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள லாஸ்லியா, “இப்போதைக்கு திருமண என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது வெறும் வதந்தி தான்,” எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காதலில் விழுந்தாரா த்ரிஷா?

சமந்தாவுடன் அந்த காட்சிகளில் நடிப்பது கடினம்

வளை ஓசை நாதம் ஏழுக்கான ஆக்கங்கள் கோரல்