வகைப்படுத்தப்படாத

கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர்உயிரிழப்பு

(UTV|CANADA) கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரிலுள்ள தேவாலயமொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தேவலாயத்தில் சிறப்பு ஆராதனை இடம்பெற்ற வேளை அங்கு ஏராளமான கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி பிரார்த்தனையில் ஈடுபட்டடிருந்த வேளையிலேயே துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரார்த்தனை இடம்பெற்றவேளை, தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 78 வயதான முதியவர் சம்பவ இடத்திலோய பலியானார். சம்பவத்தில் மேலுமெருவர் பாடுகாயமடைந்துள்ளார்.

அதையடுத்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் தேவாலயத்தில் இருந்த அனைவரும் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்துள்ளனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார், துப்பாக்கிதாரியை கைதுசெய்தனர்.

மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பொலிஸார், தாக்குதலுக்கான பின்னணி குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

Rajasinghe Central and Azhar College win on first innings

Coral reef stayed hidden until now discovered off Kankasanthurai Harbour [VIDEO]

நியூசிலாந்து நகரில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு…