உலகம்

கனடா அரசாங்கத்தினால் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு!

(UTV | கொழும்பு) –

கனடா அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள முக்கிய சவாலை சமாளிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் இரு வருடங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது எனவும், புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள் எனவும் மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் வருகை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அண்மைக்காலமாக கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள விடயமானது, கனேடிய அரசாங்கத்திற்கு பெரும் சவாலை வழங்கியுள்ளது. இதன்படி கனடாவின் சில கல்வி நிறுவனங்கள், தமது வருமானத்தை அதிகரிப்பதற்காக அண்மைக்காலமாக அதிகளவிலான சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகின்றன.

இதில் பல மாணவர்கள் தமது கல்விப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய தேவையான வசதிகள் இன்றி கனடாவுக்கு வருகை தருவதால் அவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும், தொடர்ச்சியாக அதிகரிக்கும் சர்வதேச மாணவர்களின் வருகையால், கனடாவில் தங்குமிட வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளில் இறுகிய நிலை ஒன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது போன்ற காரணங்காளாலேயே கனேடிய அரசானது, சர்வதேச மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.” என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – ஹமாஸ் தகவல்.

உலக சுகாதார நிறுவனத்திற்கு காலக்கெடு