உலகம்

கனடாவின் முக்கிய நகரை விட்டு பலர் வெளியேற- காரணம் என்ன?

கனடாவின் (Canada) ரொறன்ரோ நகரை விட்டு பலர் வெளியேற முயற்சிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழும் மக்கள் அங்கு வீடு கொள்வனவு செய்வதில் நிலவி வரும் சிரமங்கள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

சுமார் 900 கனேடியர்களிடம் முன்னெடுக்கப்பட்ட கருத்து கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கொள்வனவு இயலுமையைக் கொண்ட நகரங்களில் வீடு கொள்வனவு செய்ய ரொறன்ரோ நகரவாசிகள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வீடுகளை கொள்வனவு செய்யக்கூடிய நகரங்களில் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொள்வதற்கு அல்லது தொலைவில் இருந்து பணியாற்றக்கூடிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், வீடுகள் குறைந்த விலையில் காணப்படும் நகரங்கள் நோக்கி ரொறன்ரோ மக்கள் நகர்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதோடு, மிகவும் செலவு கூடிய நகரங்களில் இருந்து செலவு குறைந்த நகரங்கள் நோக்கி நகர்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

Related posts

கொவிட் – 19 : பரவும் வேகம் குறைவு

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்

டெக்ஸாஸ் மாநில துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி [VIDEO]