உள்நாடு

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

(UTV| கொழும்பு)- கத்தாரில் உள்ள 275 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் சுமார் 50 பேர் நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் சிலரை இன்று நாட்டிற்கு அழைத்துவரவிருந்த விமான பயணமும் தற்காலிமாக இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோட்டா நாளை நாட்டுக்கு

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க பயணத்தின் போது USAID உறுப்பினர்கள் இடையே சந்திப்பு