உள்நாடு

கத்தாரின் பிரபல புகைப்பட போட்டியில் இடம்பிடித்த இலங்கை இளைஞர்!

(UTV | கொழும்பு) –

கத்தார் சபாரி மால் நடாத்திய மாபெரும் புகைப்பட போட்டியான “FRAMES SEASON 6” இல் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எனும் தலைப்பின் கீழ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இலங்கையில் கண்டி மாவட்டம் வடதெனிய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஹூபைப் முஸம்மிலின் புகைப்படம் தெரிவு செய்யப்படுள்ளது.

இவர் தன் சிறு வயதிலிருந்தே புகைப்பட துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பல போட்டிகளிலும் பங்கு பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இவைகள் மாத்திரமின்றி ஒட்டு மொத்த இந்திய திரை உலக பிரபலங்களும் இணைந்த மிக பிரம்மாண்டமான நிகழ்வான தமிழ் மகன் விருதில் புகைப்பட கலைஞராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் கத்தாரில் வடிமைப்பளாராக தொழில் புரிந்து கொண்டு அவருடைய திறமையை புகைப்படங்கள் மூலம் வெளிக்காட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

உயர்தரப் பரீட்சையின் போது பாடசாலைகளை மூடுமாறு கோரிக்கை