கேளிக்கை

கதைக்கு தேவை என்றாலும் அப்படி நடிக்க முடியாது

(UTV|INDIA)-கீர்த்தி சுரேஷ் தற்போது, விஜய் ஜோடியாக சர்கார், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷால் ஜோடியாக சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த பிறகு தமிழ், தெலுங்கு பட உலகில் வலுவான இடத்தை பிடித்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தனது சினிமா அனுபவங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசும்போது,
“திரையுலகில் என்னை விட அழகும், திறமையும் உள்ள நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு நல்ல கதைகளும் கதாபாத்திரங்களும் அமைவதற்கு எனது அதிர்ஷ்டம் தான் காரணம். அதிர்ஷ்டம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதேநேரம் திறமையும் முக்கியம். சாவித்திரி வாழ்க்கை கதை படத்தில் நடித்த பிறகு அழுத்தமான கதைகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.
கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். கதைகள் கேட்கும்போது இதில் நடிக்கலாம் என்று மனது சொன்னால் அதை ஏற்கிறேன். முத்த காட்சியில் நடிக்க விருப்பம் இல்லை. அதுபோன்ற காட்சிகளுடன் எனக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்றதால் அந்த பட வாய்ப்புகள் கைநழுவி போய்விட்டன.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சூர்யாவின் 40

மிஸ் இந்தியாவாகும் கீர்த்தி சுரேஷ்

ஸ்ரேயாவிற்கும் மார்ச் மாதம் டும் டும்……