உள்நாடுமருத்துவம்

 கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்

(UTV | கொழும்பு) –  கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் இடை நிறுத்தம்

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் சகல சத்திரசிகிச்சைகளும் நேற்று (19) முதல் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபிக் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை அறையில் கிருமிகள் பரவுவதை துரிதமாக அகற்றி வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான குறிப்பிட்ட திகதியை அறிவிக்க முடியாது எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில், சத்திரசிகிச்சை அறைக்குள் கிருமி எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேக்கரி உற்பத்திகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம்

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

பிளாஸ்டிக், பொலித்தீன் வகைகள் சிலவற்றின் பாவனைக்கு தடை