அரசியல்உள்நாடு

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா அமைப்பாளர் நியமனம்

கண்டி மாவட்டத்திற்கான இ.தொ.கா வின் புதிய அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்பாளராக பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்றைய தினம் (08) நியமிக்கப்பட்டுள்ளார்.

இ.தொ.கா தலைமையகமான சௌமியபவனில் இன்றைய தினம் (08) கூடிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை பூர்த்திசெய்வதற்காக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இ.தொ.கா தலைமைகளால் பூர்த்தி செய்துள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.

மேற்படி இந்நியமனமானது இ.தொ.கா பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

Related posts

62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் கைது!

பாடசாலை வேன்களது நிறத்தில் மாற்றம்

அடுத்த இரு நாட்களில் குறைவடையும் மழைவீழ்ச்சி – பிரதீபராஜா