உள்நாடு

கண்டி நில அதிர்வு குறித்து ஆய்வு

(UTV | கண்டி ) –  கண்டியில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில அதிர்வு தொடர்பில் விரிவான புவியியல் ஆய்வை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் கண்டியின் சில பகுதிகளில் நான்கு நில அதிர்வுகள் பதிவாகின.

இந்த சிறியளவிலான நில அதிர்வானது, மஹகனதராவ மற்றும் பல்லேகல நில அதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் பதிவாகிய போதிலும், ஏனைய நிலையங்களில் அது குறித்து பதிவாகியிருக்கவில்லை.

இந்த அதிர்வுகள் ,பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளால் உருவாவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களை புறந்தள்ளாது, அவ்வப்போது ஏற்படும் நில அதிர்வுகள் தொடர்பில் துறைசார் நிபுணர்களைப் பயன்படுத்தி விரிவான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சரின் ஆலோசனைக்கமைய, பேராதனை பல்கலைக்கழகம், புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், மஹவெலி அதிகார சபையின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

BreakingNews: எரிபொருள் விலை குறைப்பு

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி