உள்நாடு

கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகாரிப்பு

(UTV | கொழும்பு) –  கண்டி, கேகாலை, காலி, குருநாகல் மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகாரிப்பு

கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து இன்று(15) 33,722 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணம் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதன்படி, நேற்று 280 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது கணிசமான அதிகரிப்பைக் காட்டுவதாகவும் டாக்டர் ஆரியரத்ன தெரிவித்தார்.

டெங்கு தடுப்பு ஒன்றியத்தினால் மொத்தமாக 59 MOH பிரிவுகள் அதிக டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிள்ளையானின் வழக்கு ஒத்திவைப்பு

இலங்கையில் 17 வது கொரோனா மரணம் பதிவானது

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு!