உள்நாடு

கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்யும் சட்டமூலம் விரைவில்

(UTV|கொழும்பு) – கண்டிய திருமணச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்கும் தனிநபர் பிரேரணையாக இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, 1952 ஆம் ஆண்டு 44 இலக்க கண்டிய திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கையின் சாதாரண திருமண சட்டம் மற்றும் முஸ்லிம் திருமண சட்டம் ஆகியன தொடர்பில் திருத்தங்களுடனான நான்கு சட்டமூலங்களை அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் டொக்டர் துசிதா விஜேமான்ன ஆகியோர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

இராஜகிரியவில் காருக்கு அருகில் மீட்கப்பட்ட சடலம்!