வகைப்படுத்தப்படாத

கண்டியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் முத்திரையை வெளியிட்டார்-அமைச்சர் ஹலீம்

(UTV|COLOMBO)-தபால்  சேவைகள் மற்றும் முஸ்லிம் மத விவகார அமைச்சர். கௌரவ. அப்துல் ஹலீம் அவர்கள் இன்று கண்டியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் முத்திரையை வெளியிடுவதற்கான நிகழ்வில் பிரதான விருந்தினராகப் பங்குபெற்றார்.

முதல் முத்திரை அட்டையை அமைச்சர் ஹலீம் மத்திய மாகாணத்தின் கிறிஸ்தவ மதகுரு மேன்மைதங்கிய வினியனி பெர்னாண்டோ அவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில், முத்திரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் சான்றிதல்களையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண பிரதி தபால் அதிபர் திரு. ராஜித சேனாரட்ன, கிரிஸ்துவ விவகார பிரதேச செயலாளர் மற்றும் பல மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தேசிய துக்கத்துக்கு இடையில் ரஷியா வணிக வளாக தீ விபத்தில் பலியான குழந்தைகள் உடல் அடக்கம்

New Zealand names squad for Sri Lanka Tests

மாணவர்கள் சீன மொழியில் பேச எதிர்ப்பு – பல்கலைக்கழக பேராசிரியை நீக்கம்