உள்நாடு

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – இதுவரை 8 பேர் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதன்படி, இந்தக் கொலை தொடர்பாக இதுவரை 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கம்பஹா மற்றும் உடுகம்பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், குற்றத்திற்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியதற்காகவும் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குற்றத்திற்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் மற்ற சந்தேக நபரையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று குற்றத்திற்கு உதவியதற்காக, தமித் அஞ்சன நயனஜித் என்ற 25 வயது இளைஞரும், சமோத் என்ற அஸ்கிரிவல்பொத, உடுகம்பொல பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சாய்ந்தமருதில் “சமுர்த்தி அபிமானி” வர்த்தகக் கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்

editor

வெளிநாட்டிலுள்ள எம்பிக்களை நாடு திரும்புமாறு உத்தரவு!

ஜனாதிபதி அநுர, இந்தியப் பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்க ஜயஸ்ரீ மகா போதியை தரிசித்தனர்

editor