சூடான செய்திகள் 1

கணவனின் அசிட் வீச்சுக்கு இலக்காகிய மனைவி மற்றும் மகள்

(UTV|COLOMBO) தாய் மற்றும் மகள் மீது, வீட்டுக்குள் நுழைந்துள்ள இருவர், அசிட் வீசி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவமொன்று, நேற்று(14) இரவு இடம்பெற்றுள்ளது.

கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கெக்குலாவ, போலகெவத்த, அமல்கா இல்லம் என்ற வீட்டிலிருந்தவர்கள் மீதே, இவ்வாறு அசிட் வீசப்பட்டுள்ளது.

சம்பவத்தில் எரிகாயங்களுக்கு இலக்கான அவ்விருவரும், ஆந்தபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக, மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பின்னர், மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பிரதாபசிங்க ஆரச்சியே விஜித்தா என்ற 39 வயதுடைய தாய், உயிரி​ழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் கணவர், கடந்த 5 மாத காலமாக, மனைவி, மகளைப் பிரிந்திருந்த நிலையில், நேற்றிரவு, மற்றுமொரு நபருடன் வந்திருந்த அவர், தங்கள் மீது அசிட் வீசியதாக, குறித்த நபரின் மகள், பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…