உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்தில் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

குருவிட்ட பொலிஸ் பிரிவின் அடவிகந்த பகுதியில் இன்று (03) காலை வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகிலுள்ள மரத்தில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில், 11 முதல் 14 வயதுக்குட்பட்ட 14 பாடசாலை மாணவர்களும், ஒரு பெண்ணும் வேனில் பயணம் செய்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 14 பாடசாலை மாணவர்களும் வேனின் சாரதியும் சிகிச்சைகளுக்காக எரத்த கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், இரண்டு மாணவர்களும், இரண்டு மாணவிகளும் வேனின் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

‘ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து அகற்ற எவரேனும் தயாரானால் அது வெறும் கனவு’

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்