உள்நாடுபிராந்தியம்

கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டி விபத்தில் சிக்கியது – இருவர் உயிரிழப்பு

மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெப் வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், கெப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் சாரதியும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அவர்கள் அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

இன்று நள்ளிரவு முதல் 367 பொருட்களை இறக்குமதி செய்ய தடை