உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் போவதாக விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு மின்னஞ்சல் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் கிடைத்தவுடன் விமான நிலையத்தின் பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 20ஆம் திகதி விமான நிலையத்திற்கும் அரச கட்டடம் ஒன்றிற்கும் தாக்குதல் மேற்கொள்வதாகவும், தாம் பெயரிடும் நால்வரை உடனடியாக விடுக்குமாறும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சலை சோதனையிடும் போது விமான நிலையத்தின் இணையத்தளத்திற்குள் ஊடுருவி தரவுகள் திருடுவதற்கு அல்லது வேறு நோக்கத்தில் சந்தேக நபர்கள் செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

பங்களாதேஷ் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனத்தின் இணையத்தளத்திற்குள் ஹெக்கர்கள் ஊடுருவிய நிலையில் இலங்கைக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும் இந்த மின்னஞ்சல் கிடைத்தவுடன் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்களின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

Related posts

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

MT NEW DIAMOND : கெப்டன் குற்றச்சாட்டினை ஏற்பு

அவுஸ்திரேலிய பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி