உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் தனியான 02 விசா கருமபீடங்கள்

(UTV| கம்பஹா) – நாட்டிற்கு வருகை தரும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களுக்காக விமான நிலையத்தினுள் தனியான இரண்டு விசா கருமபீடங்களை திறக்க விமான தள மற்றும் விமான சேவைகள் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் விமான தளத்திற்கு விஜயம் செய்தபோது வழங்கிய ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவகத்தின் உப தவிசாளர் ரஜீவ சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான தளத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் ஏற்றப்பட்டுள்ள சிக்கல்!

மேலும் 29 பேர் பூரண குணம்