உள்நாடு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகத்திற்கு 8.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன ஸ்கேனர் இயந்திரங்களை ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான முதல் தொகுதி உபகரணங்களை அண்மையில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் பிரவேசிக்கும் முக்கிய இடமான கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஜப்பான் அரசாங்கம் உயர் தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki தெரிவித்துள்ளார்.

Related posts

தயாசிறி ஜயசேகரவும் இராஜினாமா

மஹிந்த தேசப்பிரியவின் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை

editor

பயிற்றுவிக்கப்படாத இலங்கை இமாம்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாக்கத்தினர் : யூஸுப் முப்தியின் அறிவிப்பு