உள்நாடு

கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் மூவர் பலி

(UTV |  கண்டி) – கண்டி – கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புற பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீப்பரவலில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் காரணமாக 4 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் மற்றும், மேலும் ஒரு இளைஞன் ஆகியோர் உயிரிழந்துடன், தாய் காயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

பயணக்கட்டுப்பாடு தளர்த்தலும் சுகாதார வழிகாட்டுதல்களும்