வகைப்படுத்தப்படாத

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்பாராத விதமாக மேற்கூரை விழுந்ததால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதுவரை 41 பேரை உயிருடனர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது

“Bravest team will win first World Cup Semi-Final” – Kohli

கொழும்பு கோட்டை – தலைமன்னார் தொடரூந்து சேவைகள் இன்று முதல் மட்டு!