உள்நாடு

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

(UTV|கொழும்பு) – கட்டாரில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 264 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான, UL 218 என்ற விசேட விமானம் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளனர்.

குறித்த 264 பேரும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேவேளை, நாடு திரும்ப முடியாத நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த, 193 இலங்கையர்கள் நேற்று மாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான, UL 232 இலக்க விசேட விமானம் மூலம், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

வழமைக்கு திரும்பிய ஏ-9 வீதியின் போக்குவரத்து

editor

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்

பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்