அரசியல்உள்நாடு

கட்சியை மறுசீரமைக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

தலைவர்களை உருவாக்கும் விடயத்தில் முறையான உறவை முன்னெடுத்து கட்சியை மறுசீரமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இம்தியாஸ் தெரிவித்துள்ளதாவது;

தலைவர்களை உருவாக்குவதற்கான நடைமுறைகள் முறையாக இருப்பது அவசியம்.இதைவிடுத்து திடீரென தோன்றுவோருக்கும் (பெரசூட் காரர்களுக்கும்) பிரசாரம் செய்வோருக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் வாய்ப்பு வழங்கக் கூடாது.

கீழ் மட்டங்களுக்கிடையிலான உறவை விரிவாக்கி மற்றும் தொடர்பாடலை விரிவுபடுத்தியே இந்த நடவடிக் கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதனூடாகவே கட்சியைப் புனரமைக்க முடியும்.

இதற்காக கட்சியின் சித்தாந்தம் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டை எட்டும் குழுவாக மேலிருந்து கீழாக செயல்பாட்டாளர்கள் அனைவரும் ஒரே குரலில் ஒன்று திரள்வது அவசியம்.

கட்சி என்ற ரீதியில் அதற்கேற்ப முடிவுகளையும் எடுக்க வேண்டும்.

கட்சிப் பொறுப்புகளை ஒப்படைக்கும் போது முடிந்தவரை கருத்து ஒருமைப்பாட்டை பெறுதல் மற்றும் முதல் நிலை தேர்தலை நடத்துதல் போன்ற விடயங்களில் கட்சியின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த மறுசீரமைப்புக்காக 12 பரிந்துரைகளை அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜனாதிபதிக்கும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்

editor

சாதாரண பரீட்சையிலும் எரிபொருள் நெருக்கடி..

கொலன்னாவ தபால் நிலையங்களுக்கு பூட்டு