சூடான செய்திகள் 1

கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் ஜனாதிபதி அதிரடி

(UTV NEWS) – கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்துவோருக்கு எதிராக, கட்சியின் பலத்தை காண்பிப்பதற்கு தயார் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற கட்சியின், மாவட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அவமதிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை, கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில், சகலரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related posts

இன்று(22) அவசர கட்சித் தலைவர்கள் கூட்டம்

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை