வகைப்படுத்தப்படாத

கடும் வறட்சி – 55 யானைகள் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – கடந்த 2 மாதங்களாக ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குறைந்தது 55 யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸிம்பாப்வேயின் Hwange தேசிய பூங்காவில் இருந்த யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், யானைகளின் உயிரிழப்புக்கு பட்டினியே காரணம் என குறித்த பூங்காவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸிம்பாப்வேயில் வறட்சியினால் பயிர் விளைச்சல் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts

தமிழக கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிப்பு

அட்டன் செண்பகவத்தைத் தோட்டத்தில் மண்சரிவு

கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நண்பகலுடன் நிறைவு