வகைப்படுத்தப்படாத

கடும் மழை ,வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்ததிலும் 26 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கைபர் பக்துன்வா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், திர் பகுதியில் நிலச்சரிவு மற்றும் மழையால் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச தெரிவிக்கின்றன.

இதேபோல், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லாஸ்பெல்லா மற்றும் பரூகாபாத், கதுவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வெள்ளத்தில் சிக்கி 10க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். .

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

Three Avant-Garde suspects before Court today

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்த வாரம் நடவடிக்கை

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்