உள்நாடு

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

(UTV | கொழும்பு)- நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்) பலமான காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணவில்லை!

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

‘கோட்டா நாடு திரும்ப இது நல்ல தருணம் அல்ல’ – ஜனாதிபதி