உலகம்

கடும் பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|பாகிஸ்தான் )- பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன்.

பலுசிஸ்தானில் பனிப்பொழிவு, கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்குள்ள 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related posts

உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது

விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கட்டார் விமான சேவை தீர்மானம்.

ஏழை நாடுகளுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகள்