உள்நாடு

கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று (03) காலை கூடியது.

இதன்போது அரசாங்க வைத்திய அதிகாரிகளின் மேலதிக பணிக்கொடுப்பனவு மற்றும் விடுமுறை கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மார்ச் 5 ஆம் திகதி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரசாங்க அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் 6 ஆம் திகதிக்குள் இவை திருத்தம் செய்யப்படாவிட்டால், மார்ச் 7 ஆம் திகதி முதல் கடுமையான முடிவுகளை எடுக்க நேரிடும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

“6 ஆம் திகதிக்குள் இந்தத் திருத்தத்தைச் செய்யுங்கள், 7 ஆம் திகதியிலிருந்து நாம் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

7 ஆம் திகதிக்குப் பிறகு, சுகாதார சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை சிந்திக்க வேண்டியிருக்கும்.” என செயலாளர் வலியுறுத்தியுள்ளார்

Related posts

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை 75% குறையும் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ..!

மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகள் முடக்கம்

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் நீதிமன்றத்திற்கு