அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டு பிரச்சினை – திங்கள் முதல் முடிவுக்கு வருகிறது – அமைச்சர் விஜித ஹேரத்

ஓடர் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கையிருப்பு எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு கிடைக்கும் எனவும், அதன்படி திங்கட்கிழமை முதல் அவை விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (15) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பில் நீதிமன்றில் தடை உத்தரவு உள்ளதாகவும், அது தொடர்பில் விலைமனு கோரப்பட மாட்டாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு முடிந்ததும் அது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் ஓடர் செய்யப்பட்ட 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் எதிர்வரும் காலங்களில் தீர்ந்துவிடும் என்பதால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால் சாதாரண கடவுச்சீட்டை வழங்குவதற்கு தேவையான கொள்முதல் செயன்முறைகள் ஊடாக விலைமனு கோரலுக்கு சென்று மேலும் கடவுச்சீட்டு தொகையொன்றை கொள்முதல் செய்ய கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Related posts

46 நாட்களில் 50 இராஜதந்திரிகளை சந்தித்த விஜித ஹேரத்

editor

மஹிந்த – பசில் ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத் தடை நீடிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு