உள்நாடு

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு – இரவு 10 மணி வரை கடவுச்சீட்டு சேவை

கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவற்றை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேரத்தை அதிகரித்துள்ளதாகவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நடைமுறையின் கீழ், வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.

கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவசர தேவைப்பாடுகளுக்காக கடவுச்சீட்டைப் பெறவுள்ளவர்கள் நன்மையடைவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொரோனாவினால் இதுவரை 211 பேர் பலி

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor

எதிர்வரும் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டம்

editor