சூடான செய்திகள் 1

கடல் கொந்தளிப்பு

UTV | COLOMBO – புத்தளத்திலிருந்து மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும்.

இன்று காலை 15ஆம் திகதி 05.30 மணிக்கு நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கான வானிலை அறிக்கையில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 35 – 45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்..

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் கடல் ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயத்தில் அவதானமாக செயல்படுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வெளியீடு…

வில்பத்து பாதை வழக்கு – அடுத்த வருடம் மார்ச் மாதம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடிவு