உள்நாடு

கடலில் நீராட சென்ற மூவர் மாயம் – அம்பாறையில் சம்பவம்

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என மூவர் காணாமல் சென்றுள்ளனர்.

இவ்வாறு காணாமல் சென்றவர்களை தேடும் பணி தீவிரம் கடற்படையினர் மற்றும் மீனவர் சமுகத்தினர் பொதுமக்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி தாண்டியடி உமிரி பகுதியில் கிறிஸ்மஸ் தினமான இன்று கடற்கரையில் பொழுதை கழிக்க சென்ற தாண்டியடி உமிரி கிராமத்தை சேர்ந்த 38, 15, 18, வயதை சேர்ந்தவர்களே கடலில் நீராட சென்றபோது கடல் அலையில் சிக்கி காணாமல் சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

-பாறுக் ஷிஹான்

Related posts

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

இந்திய வெளிவிவகார அமைச்சர் LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு